இப்பதிவுக்கு காரணம் நித்தி என்னும் சொத்தியின் அண்மைய நகர்வுகளே/!
தலைவரின் வாழ்வை பல கோணங்களில் பார்க்கலாம். சித்திக்கு முன் சித்திக்கு பின் என்று. இன்னும் சொல்லப்போனால் பெரிய சித்தியோடு இன்னும் சில சின்ன சித்திகள் இருக்கிறார்கள். அவர்களை இப்போ எதுக்கு நேரா மேட்டருக்கு வருகிறேன்.
கோடி கோடியாய் கொட்டிக் குவித்த நித்தியானந்தாவின் வாழ்வில் தண்டவாளத்தில் குண்டு விழுந்தது போல ரஞ்சிதா அம்மணியோடு அண்ணர் கொஞ்சிக்குலாவிய காட்சிகள் வெளியாகின. அனைத்துவகை இயலும் யாம் அறிவோம் என்று மீடியாக்கள் முன்னே துணிந்து எழுந்து நின்றவர், சில நேரங்களில் சிரிக்கவும் வைத்தவர் சனியனால் சல்சா டான்ஸ் ஆடினார்.
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்ட மா என்று அன்று இருந்த மாண்புமிகு அரசியல் தலைவர்களின் மறைமுக உதவியோடு தான் தூயவர், தன மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, வீடியோ போலியானது, என்னுடைய சமூகவிரோதிகளின் கொடுஞ்செயல்தான் இது என்றெல்லாம் கவிமழை பொழிந்தார். இன்று நவீன தொழினுட்பம் வளர்ந்துள்ளது. யார் வேண்டுமானாலும் யாரைப்பற்றியும் வீடியோக்களைத் தயாரிக்கலாம் என்று படு மொக்கைத்தனமாகவும்,சூடு சுரணை வெக்கம் மானம் இல்லாமலும் மக்கள் முன்னிலையில் பீத்திக்கொட்டினார். கூகுள் ஓணர் கூட இப்பிடி புலம்பியிருக்க மாட்டான்.

ஓடினாலும் ஓடினான் பரதேசி "பென்ஸ் கார்+ டபிள் கார்ட் கட்டில்( யாரோ வெய்ட்டிங் போல பாவம் ) போதாக்குறைக்கு ஆதீனத்தின் 160க்கும் மேற்பட்ட தங்க காசுகள்" எல்லாம் கொள்ளயிட்டுகொண்டுதான்...
வாழ்க ஆன்மிகம்! முற்றும் துறந்தவனுக்கு பென்ஸ் கார்,டபுள் கட்டில்,பஞ்சுமெத்தை,AC ரூம், சந்தனக்கட்டையும் புலித்தோலும் புண்ணாக்கும்// ஹ்ம்ம்
ஆச்சிரமத்தில் ஓசி சோறு தின்றுகொண்டிருக்கும் இவங்களுக்கு அள்ளிக்கொடுக்க முன்வருகின்ற பக்திப்பரவசத்தில் மிதக்கும் பக்தகோடிகள் வெளியில் பிச்சை எடுக்கும் ஒரு ஊனமுடவனுக்கு கொடுக்க தயங்குவது எதற்காக? (இவர்கள் தான் ரியல் பக்திப் பழங்கள் என்று வெளியில் சொல்லித்திரிபவர்கள்)
இப்போது தல கர்நாடகம்,காசி,ராமேஸ்வரம் என்று அலைகிறாராம். ஒருமணி நேர சொற்பொழிவுக்கு 7 லட்ச இந்திய ரூபாய்களை வாங்கிக்குவித்த என் (......) அவர் இன்று இப்படி அலைகிறாரே என்று ரஞ்சி சித்தி கஞ்சி வடித்தாலும் வடிப்பார், பொறுத்திருந்துதான் அடுத்த சூட்டை கிளப்ப வேண்டும்...கெண்டிநியூஸ் வெஜிடிங் மக்களே//
ஆதீனத்திலிருந்து இவ்வளவு கொள்ளையடித்தும் அடங்காத நித்தி தன்னுடைய செங்கோலும், தங்கக்கிரீடமும் 'ஆதீனம்' அருணகிரியிடம் இருப்பதாகக் கூறி தன சகாக்களை அனுப்பியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆதீனம் மீது விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்துள்ளனராம் சாக்கடைகள். இதற்கு முன்னரே நித்தியானந்தாவால் தன்னுயிருக்கு ஆபத்து என்று ஆதீனம் அருணகிரி போலிஸ்முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடப்பட வேண்டியது.
இல்லை இந்த புனித புள்ளியம்பலத்துக்கு இப்போது செங்கோலும் தங்கக்ரீடமும் இல்லாத குறைதான். இதை எவன் இவனுக்கு கொடுத்தானோ அவனே இபோதைய ஆதீன அருணகிரி.
இல்லை இந்த புனித புள்ளியம்பலத்துக்கு இப்போது செங்கோலும் தங்கக்ரீடமும் இல்லாத குறைதான். இதை எவன் இவனுக்கு கொடுத்தானோ அவனே இபோதைய ஆதீன அருணகிரி.
ஆதீனம்''அருணகிரியின் முன்னாள் தோழரும் அன்பரும் இந்நாளில் எதிரியாகிவிட்டார். இனிமேல் அருணகிரியும் ஆதீனத்தை தனது சொந்த அபிலாசைகளுக்காக விற்க மாட்டார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆதீனத்தை அரசாங்கமோ மதப்பற்று கொண்ட உண்மையான தொண்டர்களோ பொறுப்பில் எடுத்தால் மட்டுமே காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது.
எண்ணங்களில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆன்மீகமும் இன்று நித்தி போன்ற சொத்தி சாமியார்களால் கேலி செய்யப்படுவதும் , கீழ்நோக்கி செல்வதும் பொறுக்கமுடியாத/ மன்னிக்கபடமுடியாத குற்றங்களாகும்.
இவனைப்போன்ற ஆட்களை தூக்கில் போட்டால் கூட மீண்டும் முளைத்து வருவார்கள் என்பது இதுவரையில் எமக்கு உறைக்கும் படி சொல்லப்பட்டிருக்கும் பாடம். சமூகத்தில் நாம் எங்கே இருக்கின்றோம் என்று எப்போதாவது நினைத்திருப்போமா?இவனைப்போல போலிச்சாமியார்களின் கழுத்திலும் காதிலும் போடுபவற்றை ஏழை ஜனங்களின் வயிற்றில் போடுங்கள்!
*************
No comments:
Post a Comment