வெற்றி FM - அறிந்தும் அறியாமலும் சில......
பலவருடங்களுக்கு முன்னர் தமிழ் நாடே இலங்கை வானொலியை மட்டுமே நம்பி இருந்த காலமும் உண்டு. அந்த தொழிநுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் கூட இலங்கை வானொலி, இலங்கையைத் தாண்டி இந்தியா வரை வியாபித்திருந்தமை அதிலும் குறிப்பாக இந்திய தமிழ் மக்கள் இலங்கை வானொலியையே நம்பி இருந்தமை என்பது ஆச்சரியமளிக்கும் விடயம்!
இவ்வாறாக ஆரம்பகாலம் முதல் இலங்கையின் வானொலித்துறை மேலோங்கி காணப்பட்டது. அரச அதிகாரத்தில் இருந்த இலங்கை வானொலியைத் தொடர்ந்து முளைத்த தனியார் வானொலிகள் குறுகிய காலத்தில் இலங்கை முழுவதும் பரவி மக்கள் மனதில் இடம் பிடித்தன.
1998 ஆம் ஆண்டளவில் உருவான சூரியன் வானொலியானது இதற்கு உதாரணம் காட்டப்படவேண்டிய சரியான தெரிவென்று நினைக்கின்றேன்.இதன் காரணத்தாலோ என்னமோ இப்போது இருப்பவர்கள் யாரையாவது கேட்டுப்பாருங்கள் இலங்கை வானொலியைத் தெரியுமா என்று அநேகமானவர்களின் கருத்து இல்லை என்பதாகவே இருக்கும்./ இப்படியாக வானொலித்துறையில் இலங்கையின் தனியார் அலைவரிசைகள் வெகுவாக வளர்ந்தன.( ஆனால் நான் பேசப்போவது இவை பற்றி அல்ல)
கடந்த நவம்பர் 1ம் திகதி அன்று இலங்கை வானொலிகளின் பண்பலைகள் தேசிய தேவையை மையமாகக் கொண்டு மாற்றியமைக்கப்பட உள்ளதாக
அலைவரிசைகளை முகாமைத்துவப்படுத்தும் பூரண அதிகாரத்தை கொண்ட இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குவினால்(TRC) அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் விட்டது.
இந்நிலையில் அனைத்து வானொலிகளும் தற்போதுவரை ஒழுங்காகவும் முன்பு இருந்ததைவிட துல்லியமாகவும் மாறுபட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றன. ஆனால் ஒரு பிரபலமான வானொலிக்கு மட்டும் தான் சோதனை.(VETTRI FM) அந்த வானொலி பற்றிய வெளிவந்த, வெளிவராத பல விடயங்களை வெளிக்காட்டுவதே இப்பதிவின் நோக்கமும் கூட..
என்னை வெற்றி fm வானொலி கவர்ந்து இழுத்தது 2011 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதியில். அப்போது யாழ்ப்பாணத்தில் பண்பலை வழியேயான வெற்றியின் ஒலிபரப்பு தெளிவின்றி இரைச்சலுடனேயே காணப்பட்டது. இணையவழியாக நான் கேட்டு மகிவது வழக்கம். இவ்வாறு (universal networks pvt ltd) இன்கீழ் வானொலி இருந்த வேளை முதல் முதலாக 2011, ஓகஸ்ட், 21ம் திகதி மிகத்துல்லியமான முறையில் வெற்றியின் யாழ் ஒலிபரப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றுமுதல் ''நாற்றிசையும் நமது ஒலி'' என்ற மகுட வாசகத்துடன் அசுர வளர்ச்சி கண்ட குறித்த வானொலி பல தரமான அறிவிப்பாளர்களையும் தன்னகத்தே கொண்டு வினைத்திறன் மிக்க முறையில் படைப்புகளை தாயரித்து ஒலிபரப்பியதன் மூலமாக மக்கள் மனதில் இலகுவாக இடம் பிடித்தது.http://vettrifm.blogspot.com/2008/02/blog-post.html இதை சொடுக்குவதன் மூலம் வெற்றியின் ஆரம்ப நிலையைக் .
கண்டுணரலாம்.
தடைக்கற்கள் பலவற்றை படிக்கற்களாக நினைத்தும், பல துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததும் முன்னேறிய பெருமை இவ்வானொலிக்கு எப்போதுமே உள்ளது.அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் (universal networks pvt ltd) நிறுவனத்திடமிருந்து (voice of asia) நிறுவனத்திடம் வெற்றி வானொலி கைமாறியது. அங்கிருந்துதான் பிரச்சனைகள் ஆரம்பித்திருகின்றன என்று நினைக்கின்றேன்.
யாழ்ப்பாணத்துக்கான வெற்றியின் தமிழ்ச்சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதை ஏன் என்று கேட்ட வெற்றியின் அறிவிப்பாளர்கள் மிகவும் வருத்தத்துக்குரிய முறையில் நடத்தப்பட்டிருக்கிறார்கள். வானொலியின் நிகழ்சிகளின் பெயர்கள் மாற்றம் பெற்றன,நேரங்கள் மாற்றப்பட்டன,அறிவிப்பாளர்கள் பலரை காணக்கிடைக்கவில்லை, நிறு வனத்துக்குள்ளேயே முரண்பாடுகள். இப்படியாக பிரச்சனைகளை அடுக்கிகொண்டே போகலாம். இவை அனைத்தும் அறிவிப்பாளர்கள் தங்களின் பொறுமையின் எல்லையைக் கடந்த பின்னே வெளிவிட்ட ஆதாரங்களாகும். இறுதியாக வெளிவந்த தகவல்களின் படி நோக்குகையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊழியர்கள் ஊதியம் இன்றி வேலை செய்துள்ளனர். அதாவது ஒரு பிரபல வானொலியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது. அதனை தரும்படி கோரிக்கை விடுத்த அவர்களுக்கு அதிகார வெறி பிடித்தவர்களால் வழங்கப்பட்ட பதில் ''விரும்பினால் இங்கே இரு இல்லையெனில் வெளியே போ'' இதில் முக்கிய விடயம் என்னவெனில் முன்னணி அறிவிப்பாளரான 'லோஷன்' கூட இந்த கொடுமையான விடயத்தை தட்டி கேட்டபோது அதே பிரைச்சனைக்கு உட்படுத்தப்படுளார்.
தமிழனாய் இலங்கையில் பிறந்த அடித்தட்டு குடிமகன் முதல் பிரபலங்கள் வரை இன அடக்குகைகளுக்கு பணிந்து போவதுதான் வழியா!!

இவ்வாறாக இருக்கும் போது பண்பலைகள் மாற்றியமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்தும் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் வானொலி வேலை செய்யவில்லை. அறிவிப்பாளர்கள் எவரும் நிலையத்துக்கு செல்லவில்லை.கேட்டால் நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட பின்னரே வானொலி வழமை போல் இயங்கும் என்று பதில் வந்தது 011 230 4387 என்ற இலக்கத்தில் இருந்து// கொழும்பில் வேலை செய்வதாகவும் தொடர்ந்து பாடல்களே ஒலிபரப்பபடுவதாகவும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கும் போது நண்பர் ஒருவர் அழைத்து சொன்னார். நானும் இணையதளத்தில் தேடிப்பார்த்த போது எனது நண்பர் சொன்னது போன்று அறிவிப்பாளர்கள் இல்லாத முதல் வானொலியாக வெற்றி இயங்கிகொண்டு இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக சமூகவலைத்தளங்களான FACEBOOK ,TWITTER என்பவற்றிலும் ரசிகர்கள் கேள்விகேட்கவும்,கொதித்தெழவும் ஆரம்பித்திருக்கின்றனர். வெற்றி FM மீண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்போடும் அறிவிப்பாளர்களுக்கு சம்பளம் இல்லை,நியமன கடிதங்கள் வழங்கபடாமை, தமிழ் புறக்கணிப்பு,ஒலிபரப்புத்தடை ஆகியவற்றிக்கு கடும் கண்டனத்தையும் தெரிவிப்பதாக இப்பதிவு அமைகின்றது.****
இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டலாம்.
16 comments:
அருமையான பதிவு சில விடயங்களை மேலும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
Hi குமரன்....!
வெற்றிக்கு தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் அதே இடைவிடாத பாடல்களே ஒலித்துக்கொண்டு இருக்கின்றது இந்த நிலையில் உங்கள் பதிவு அறியாத சில நேயர்களுக்கு சிறிது விளக்கத்தை கொடுக்கும், கொடுத்து இருக்கு இன்னும் விரிவாக பல தகவல்களை வழங்கி இருக்கலாம்....தவிர்த்தது அது உங்கள் பாதுகாப்பு கருதியாகவும் இருக்கலாம் so...! பொறுத்து இருந்து பார்ப்போம்.....
எனக்கு வானொலி கேக்குற பழக்கம் இல்ல தம்பி
நீங்கள் கூறிய கருத்துகள் ஆதார பூர்வமானவை எனின் ஏற்றுக்கொள்ள நானும் தயார்.
அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் நானும் பங்குபற்றி இருக்கின்றேன் ஆனால் வெல்லவில்லை...அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இது வரை பரிசு கொடுக்கப்படாமல் யாராவது இருந்தால் கூட்டி வாருங்கள்...உண்மையென நிருபிக்கப்பட்டால் ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் குறித்த வானொலியை கேட்பதை நிறுத்துவேன்.ஆதரவு தரமாட்டேன், என் முகநூல் பெயரை மாற்றுவேன்//////
உங்கள் கருத்துக்கு நன்றி BOND 2012#
ஹ்ம்ம்..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா///
ஹ்ம்ம்..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா///
Ahh:) வருகைக்கு நன்றி சகோ :)
இது சத்தியமான உண்மை. உதாரணத்துக்கு இவரிடமே கேளுங்கள்:http://www.facebook.com/hiprabath?fref=ts
எனக்கு வானொலி கேட்டும் பழக்கம் இல்லை.வெற்றி பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றேன்
பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது நன்றி
வருகைக்கு நன்றி சகோ :)
அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை....
பதில் வந்ததும் சந்திப்பேன்//
'அதிரடி புதிரடி' நிகழ்ச்சி மூலம் இலட்சக் கணக்கில் காசைச் சுருட்டியவரும் அவருடைய 'கடிதக் காதலி' யும், சகாக்களான ...ர்ஷி, ....பன் பிலிப்பு, கிண்டுகொலிஜ் ..க்சி போன்ற அடிவருடிகளுமாக நிர்வாகத்தின் காலை நக்கிவருவதாகத் தகவல். எனவே விரைவில் வெற்றி யில் இந்த நாராசக் குரல்கள் உங்களுக்காக வசைபாட மன்னிக்கணும் இசைபாட ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
M.குமரன் நீங்கள் ஒரு விடகம் செய்யங்கள். பொதுவான ஓரடதத்தில் facebookஇந்த நிகழ்ச்சியில் வென்று பணம் கிடைக்காதவர்களை சொல்ல சொல்லிப் பாருங்கள். யாரெல்லாம் சொல்கிறார்கள் என்ரு தெரியும்.
வெற்றியின் ரசிகன் என்பதை விட லோசன் அண்ணாவின் ரசிகன் நான் என்பது தான் உண்மை... அவர் எங்கே போகிறாரோ அங்கேயே ஆதரவு வழங்குவேன்
இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்... கருத்துக்கு நன்றி சகோ!!!
Post a Comment