Friday, December 21, 2012

நாசமாபோச்சு, உலகம் அழியுது.!!

உலகம் அழியபோகிறது என்னும் பீதியினாலேயோ என்னமோ நீண்டநாட்களாக சந்திக்க முடியாமல் இன்று இவ்வருடத்தில் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நாளில் சந்திக்கிறேன். எல்லோரும் பேசுகின்ற, எழுதுகின்ற, கற்பனைகளால் வடிவமைக்கின்ற விடயம் என்றாலும் நானும் அதை பற்றியே பேச வேண்டும்.( தொழில் தர்மம்) கங்னம் ஸ்டைல்"gangnam style''  நடனம் எப்படி மெது மெதுவாக உலகமெங்கும் பிரபலமாகியதோ, அதே போல தான் 21 டிசம்பரில் உலகம் அழிய போகிறது என்ற வதந்தியும் வைக்கோலில் போட்ட சிகரெட் போல புகைந்து புகைந்து பட்டி தொட்டி முதல் 'லாஸ் ஏஞ்சல்ஸ்' வரை பரவி இருக்கிறது. இதற்கிடையில் உலகின் பல பாகங்களிலும் பெய்த குறிப்பாக இலங்கையில் பெய்த '' சிவப்பு மழை, மஞ்சள் மழை, இறால் மழை, மீன் மழை, முதலை  மழை'' என்பன எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றி விட்டு அப்படக்கர்களுக்கு விருந்து வைத்துள்ளன. கேக்குறவன் கேனயன் என்றால் 'குமரன் ஒபாமாவுடன் டின்னர் சாப்பிட்டான்' என்றாலும் நம்புவான். அதே போலதான் இந்த கட்டுக்கதையும். 

இதை நம்பியவர்கள் பலர் மனநலம் பாதிக்கப்பட்டும் அதிர்ச்சிக்குள்ளாகியும் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் பலர் சொத்துகளை விற்றும், வங்கியில் உள்ள பணத்தை வழித்து துடைத்தும் செலவு செய்கின்றனர். இவர்களைத்தான் விட்டுவிடலாம்,இன்னும் பலர் வேறுவிதமான வீரச்செயல்களில் இறங்கியுள்ளனர். 2013 செப்டம்பர் மாதம் படுமோசமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. (புரியாதா என்ன)

என்ன கொடுமை சரவணா, மாயன் கலண்டர் முடிந்து 2 மணிநேரம் தாண்டிவிட்டது.(2012,12,21 - 11.00) இன்னும் பீதி அடங்கியபாடில்லை. 
உலகம் அழியபோகிறது என்றவுடன் பரம்பரை பகையில் இருந்த குடும்பங்கள் சேர்ந்து வாழுகின்ற, சண்டை போட்ட காதலர்கள் ஒன்றாகியும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில்  இடைவெளியும் குறைந்து, மனைவியை விட்டு பிரிந்த கணவன் ஓடோடி வந்து ... சப்பா முடியல! ஆனாலும் இவை பல நன்மைகளை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளன.

மாயன் என்ற மண்ணாங்கட்டிகளால் வந்த வினை தான் இது. ஆனாலும் பகுத்தறிவு மிக்க இந்த நவீன யுகத்தில் வாழும் மனிதர்கள் சமய புராதன நம்பிக்கைகளை நம்பி மோசம் போவது சற்று வியக்கவே வைக்கிறது!  ''யோவ், உங்க வீட்டில இந்தவருடத்தின் கலண்டர் முடிந்தால் அடுத்தவருடதுக்கு புது கலெண்டர் வாங்கி மாட்டுவியா, அத விட்டுவிட்டு இப்படி உளறாத'' என்றும் பலர் சொல்லி கேட்டது கொஞ்சல் சிரிப்பை வர வைத்தாலும் சிந்திக்க வைக்கிறது. குறித்த மாயன்களின் கலண்டர் இன்றுடன் முடிகிறது, அதனால் உலகமே முடிகிறது என்பது விசரனின் பிட்டை பைத்தியக்காரன் உண்ட கதைதான். 
Add caption
சர்வாதிகாரம், அடக்குமுறை, ஆண் ஆதிக்கம் பேசிய பல மனிதர்கள் மனித நேயத்தை அறிந்து, உணர்ந்து செயற்படுகின்றனர் என்றால் வதந்தியை பரப்பிய கோமாளி  கூத்தர்களுக்கும் ஒரு வகையில் பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும். இதை பற்றி மேலும் பேசாமல்  ''என்னமோ ஏதோ இன்றுடன் பலரின் மனதில் ஏறி இருந்து சல்சா ஆடிய ஒரு கொடூர பிசாசு அழிய போகிறது என்ற நம்பிக்கையுடன் நம்ம சகோக்களின் அதீத ஆர்வத்தாலும் முயற்சியாலும் உருவான  இந்த பாடலையும் கேட்டுவிட்டு உங்கள் வாயில வாறதை போட்டுவிட்டும் போங்க :) வாழ்க வளமுடன்.! நல்லதே நடக்கும்!!
http://www.youtube.com/watch?v=6BSdb8q2Ygk&feature=player_embedded 

2 comments:

மைந்தன் சிவா said...

பைதியகாரனுக :P

yarl Kumaran said...

பைதியகாரனுக :P/////// அண்ணே, மாயன்ஸ் பற்றி சொல்லுறீங்களா? இல்ல நம்ம மக்கள்ஸ் பற்றியா?? இல்ல என்னை பற்றியா?? அவ் :D