Monday, December 3, 2012

ஜில் ஜில் ஜிகா ஜிகா - இலங்கை போக்குவரத்து பொலீசார்


                                                    ஜிகாஸ் : இவரில்ல அவரு.!!

#போக்குவரத்து நெருக்கடிகளைக்குறைத்து அவற்றை சீர்செய்வதில் பொலிசாருக்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் பல வேளைகளில் வீதி நெரிசலில் சிக்கித்தவிக்கும் போது சுர்ரென்று சூரைக்காத்தாய் வந்து சுழன்றடித்து கிளியர் பண்றதில் நம்ம ஆட்கள் கில்லாடிகள். மேலும் பல சமூக பணிகளை இன்றைய போக்குவரத்து பொலிஸ் செய்து கொண்டிருக்கிறது. அப்படியான சில விடயங்களை ஆராய்ந்து அவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிப்பதையே  இப்பதிவு இலட்சியமாகக் கொள்கிறது :(P)

ஆசிய போக்குவரத்து காவல் துறை (hit) வரிசையில்'உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி' அதிகம் பேசப்படுவோர் சிறிலங்கா ட்ராபிக் போலிஸ்!(?) இதற்காக இவர்கள் படுகின்ற கஷ்டமும், துன்பங்களும் எண்ணிலடங்காதவையாச்சே... கட்டாயம் அவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.  (பேச்சு வழக்கு புரியாதவங்க இப்பவே கிளம்புங்க)

1) இவர்கள் கடமையில் ஈடுபடும் போது பாரபட்சம் பார்ப்பதே இல்லை.

2)அல்லும் பகலும் ஏன் மழை,வெயில் கூட பாராது உழைப்பார்கள்.

3)ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது வீதிகளில் நிற்பார்கள் 

4)வாகன நெரிசல் வரவே வராது 

5)நல்லெண்ணம் படைத்தவர்கள் ஆகையால் -அலுவலக வாகனங்களை பயன்படுத்துவதில்லை. (கோல்ட் மெடல் அக்டிவிட்டி)

6)நகர் புறங்களை விட கிராமங்களில் கடமை உணர்ச்சி அதிகம்.

7)மக்கள் மனதை தொட்டவர்கள் 

8)மக்களோடு மக்களாக கலந்திருப்பர்

9)இவர்களுக்கு பொது மக்களிடமே பிரதிநிதிகள் உண்டு

10) முக்கிய குறிப்பு- போலிஸ் உங்கள் நண்பன் 

.................(நில்லுங்க பாஸ் நில்லுங்க) இப்போ நீங்க மேல படித்த பத்தையும் பின்வருகின்ற பத்தோடு ஒவ்வொன்றாக சேர்த்து படியுங்க. இதுதான் கேம்+ ரீவைண்ட் ப்ளீஸ் >> போலோ மீ>>>

1)  கொக்கா, மக்கா என்று பாராமல் 500, 1000 என்று கேட்பார்கள்

2) இம்போர்டன்ட் பாயிண்ட்: வெயிலை விட மழையில் தான் மேலதிகாரிக்கு அகப்படாமல் எங்களை தனியாக கவனிக்க வைக்க முடியுமாம்.

3)குடிமகன்கள் சண்டேயில்தான் அதிகம் அகப்படுவார்கள் (செம பிரெய்ன் பவர்) 

4) எப்படி வரும்...இல்ல தெரியாமதான் கேக்குறேன் வாகனங்கள் ஓடினால்தானே நெரிசல் வரும்- இவனுங்கதான் எல்லாரையும் வீதி ஓரமாய் மறிச்சு வச்சு கறத்தல் தொழில் செயுரானுங்களே. 

5)பயுரோலயோ/ பிக்கப்பிலையோ வந்தா அது சீனியர் போலீசு. இவனுங்க சிங்கார சீமானுங்க. டூ வீலர் தான் யூஸ் பண்ணுவாங்க..அப்போதான் தூக்கி போட்டுவிட்டு ஒளிஞ்சு நின்னே உழைக்கலாம். (திரும்பவும்:செம பிரைன் பவர் இவங்களுக்கு)

6) யோவ், புரியலயா...... " அங்க ட்ராபிக் அதிகம், சோ கஷ்டமையா கஷ்டம்" அவ்வ் 

7) இது மறைக்க முடியாத ,கூடுதலாக மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களால் மறக்க முடியாத உண்மை :-கொத்து ரொட்டியும் சாராயமும் சொந்த காசில வாங்கி கொடுத்த மக்கள்ஸ் எப்பிடியையா மறப்பாங்க. ///குறிப்பு: மக்கள் மனதை தொட்டவர்கள்.///  

8) இல்லாமையா பின்ன...இப்போ சிவில்லையும் கிளம்பிட்டானுங்கையா!!கிளம்பிட்டானுங்கையா:P 

9)சங்கமே இருக்கு நீங்க வேற.. (பாயிண்டு '' லைசன்ஸ், காப்புறுதி பத்திரம், வரிப்பத்திரம் இல்லாம வசமா வந்து மாட்டும் வித்துவான்களை' இரவு ஆறுமணிக்கு பிறகு தனியாக கவனிக்க' போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று வக்காளத்து வாங்குவது போல வாங்கிவிட்டு நம்பி போன எருமை மாட்டை முடியும் வரை கறந்துவிட்டு அனுப்பத்தான்") என்ன அப்பிடி பார்க்குறீங்க புரியலையா?? உங்களுக்கு புரியுற மாதிரி சொன்னா 'போலிஸ் இடைத்தரகர்'  ம்//அப்ப பாருங்கவன்// 



10) ஆனா ஒன்னு தொழில் தர்மம் மீற மாட்டானுங்கையா அவனுங்க..'' ஒரு தடவை பிடிபட்டு கறவை மாடு ஆகினால் அப்புறம் நீயும் என்னை போல் போலிசின் நண்பன் தான்'' ஹீ ஹீ செம ஜாலி :'(




கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாத எங்கள் தங்க சிங்கங்களின் பெருமைகள் பற்றி ஏதோ என்னால முடிஞ்சது 10 கிராம் தங்க மெடல்ஸ் தான். இன்னும் ஏதாவது வைத்தெரிச்சல்கள் உங்களுக்கு இருந்தால் பின்னால கொட்டுங்க. ''ஐயோ சாரி'' பின்னூட்டத்தில் கொடுங்க.//
 ( ஹரி ஓம் 'ஜில் ஜில் ஜிகா ஜிகா)




2 comments:

Unknown said...

ஹஹஹா சூப்பர்:)

Unknown said...

நன்றி மைந்து பாஸ்:)