Wednesday, November 7, 2012

''சின்மயி<> கார்த்திக் சிதம்பரமும் கருத்துச் சுதந்திரமும்


வந்தவுடனே தலைப்பை பார்த்து வித்தியாசமா ஒன்னும் திங் பண்ணாதீங்க. இது முழுக்க முழுக்க தமிழ் நாட்டு சட்ட சபையின் கபட நாடகம் பற்றிய பதிவு. சட்டங்களை இயற்றும் உரிமை ஒரு இறையாண்மை நாட்டின் சட்ட சபைக்கு இருந்தாலும் கூட, இது மக்கள் எதிர்பார்க்காத மிகவும் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பு. 

உலகில் எங்கு பார்த்தாலும் பணமும் பதவியும் தான் விளையாடுகிறது. ஒன்று அரசியல் பிரமுகர் அல்லது சினிமா பிரபலம்.
இந்த இரண்டு இடத்திலும் தான் பணமும் பதவியும் குவிந்து கீழிருப்பவனை பாடாய் படுத்துகின்றன. இதற்கு தமிழ் நாடும் விதிவிலக்கல்ல. ஆனால் சிதம்பரத்தின் மகனும் சின்மயியும் தான் விதிவிலக்கு :- காவல் துறைக்கும் அரசியல் ஆதிக்கவாதிகளுக்கும்!

ஒரு சாதாரண குடிமகனுக்கு ரேஷன் கடையில் கூட மரியாதை இல்லை. கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகள், சேவைகளை கூட பிடுங்கி தின்னும் நெஞ்சில் ஈரமில்லா வஞ்சக் கழுதைகளின் பிடியில் சிக்கி தவிக்கின்றான் இன்றைய ஏழை மனிதன். அப்படி இருக்கின்ற வேளையில் காவல் துறையில் தனது முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று நம்பி போனால், அங்கேயும் கம்பி எண்ணுவது முறைப்பாடு கொடுக்க சென்ற சாதாரண குடிமகன் தான். ஆசியா முன்னேறுகிறது,இந்தியா அபிவிருத்தி அடைகிறது, இலங்கை மிளிர்கிறது என்று பிரச்சாரம் செய்யும் சுயநலன் மிக்க (அரசியலை கள்ளச்சாராய வியாபாரம் போல் காய்ச்சி விற்கின்ற)  இந்த கொடுவான்களை விரட்ட காவல் துறை தயங்குவதும் பின்னர் அவன் கொடுக்கும் ஓசிக்காசில் குளிர்காய்வதும் என்று நகர்கிறது இன்றைய நிலை.

சமூக வலைத்தளமான TWITTER  இல் தன்னை ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக சின்மயி என்ற சிங்கர்  கொடுத்த  புகார் படிக்கபட்டதோ இல்லையோ, வழக்கு பதியபட்டதோ என்னமோ,,அக்கா கையைக்காட்டிய குறித்த(ராஜன்) நபர் அடுத்த 24 மணிநேரத்துக்குள் காவல் நிலையத்தில். சும்மா இல்லைங்க கொலைக்குற்றவாளி போன்ற பார்வையில்// இது உங்களில் அநேகமானவர்களுக்கு தெரிந்து இருக்கலாம். இவன் என்னடா பழசை புரட்டி எடுக்கிறானே என்று கூட சலிக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவதோ வேறு......

கடந்த வாரம் இதோ போல ஒரு நிகழ்வு. இந்திய நிதித்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் என்பவர் சின்மயியின் வழியை பின்பற்றி ஆதிக்க வெறியால் ஒரு அப்பாவியை அரஸ்ட் செய்ய வைத்துள்ளார். TWITTER இல் தன்மீது அவதூது பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புதுச்சேரியை  சேர்ந்த வர்த்தகரான ரவி ஸ்ரீநிவாசன் என்பவரை காவல் துறையை கையுக்குள் வைத்து கைதாக்கினார். குறித்த நபரும் ராஜன் போலவே விடியற்காலை 5 மணிக்கு வீட்டில் வைத்து பலவந்தமாக கைது செய்யபட்டுள்ளார்.                                                        

இது இப்படி இருக்கும் போது ரவி ஸ்ரீநிவாசன் கூறுகையில் : தான் மீடியாக்களில் வெளியான செய்திகளையே tweet பண்ணியதாகவும் இதில் தனது சொந்த கருத்துக்கள் எவையும் இல்லை என்றும்'' கார்த்திக் என்பவர் செய்த ஊழல்களையே வெளிப்படுத்த முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 
அரசியல் பிரமுகர் மீது சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததுக்காக ஒருவர் கைது செய்யபட்டிருக்கும் விதமானது கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் இணைய சுதந்திரம் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டு, பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. ஒருபக்கம் (தமக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்து) மட்டுமே ஆராய்கின்றனர். எதிர்த்தரப்பு வாதியாக பார்க்கபடுபவனை கருத்துக்களை கூற விடுவதும் இல்லை, அவன் கூறினாலும் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

அசாதாரணமான ஒரு சூழ்நிலையை தமிழர் மத்தியில் விதைத்திருக்கும் இந்த இரு செயல்களும் மட்டுமா காவல்துறையின் கண்களுக்கு தெரிந்தன?
இப்படி எத்தனை வறுமைப்பட்ட சின்மயிகள், சாதாரண கார்திக்குகள் தங்கள் துன்பங்களை கொட்டி இருப்பார்கள்! இவர்கள் கொடுத்த புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டனவா? நடவடிக்கைதான் எடுக்கப்பட்டதா?
மாறாக பிரபலங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளைத்தொடர்ந்து லேட்டஸ்டாக தமிழக அரசால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறதாம். "சமூக வலைத்தளங்களை தவறான முறையில் பயன்படுத்தினால் மறுகருத்துக்கிடமின்றி  3 ஆண்டுகள் கடூளியச்சிறை''  இது எந்தவகையில் நீதி நேர்மைக்கு ஒப்பானது என்று நான் கேட்கின்றேன். 

ஒருவன் செய்யும் குற்றத்தையும், ஊழல்களையும் வெளிப்படுத்துவதற்கு சமூகத்தில் சாதாரண குடிமகனுக்கு உரிமை  இல்லையா? உங்கள் வள்ளல்களையும், பெருமைகளையும் உலகுக்கு அம்பலப்படுதுபவணுக்கு "தவறான முறையில் ச.வ.தளத்தை பயன்படுத்தினான் என்ற போர்வையில் 3 ஆண்டு சிறைத்தண்டனை.< ஹ்ம்ம் சூப்பரோ சூப்பர்> நடத்துங்கையா நடத்துங்க! 
நான் புகார் கொடுத்தால் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? இல்லை நீங்கள் கொடுத்தாலாவது பலன் கிட்டுமா?  
கிட்டாது காவல்துறைக்கு பலன்.  எம்மிடம் பணம் இல்லை என்றுதான் மாமாக்களுக்கு தெரியுமே!  எம்மால் அவர்களுக்கு புறமோசன்தான் கிடைக்குமோ என்ன! நான் கேட்பது ஒன்றே. நாட்டில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் எல்லா வகையிலும் சமமானவர்கள். உரிமைகள்,சேவைகளை பெற்றுக்கொள்வதில் இருந்து கருத்துக்களை வெளிப்படுத்தும் கருத்து சுதந்திரம் வரை./
ஆக மொத்தத்தில் சட்டம் இயற்றுவதுக்கு சட்டம் படித்திருக்க வேண்டுமோ இல்லையோ, இரண்டு மூன்று பிரபலங்களை காரணம் காட்டி அவர்களுக்கு  சார்பாகவே மக்களுக்கு நன்மை என்ற போர்வையில் நாட்டில் கலக்கத்தை ஏற்படுத்த விளைகின்றனர். 
 என்னய்யா இது; ஜனநாயகம், இறையாண்மை என்று பிரச்சாரம் செய்துகொண்டு மக்கள் கருத்துக்களை மிதித்தீர்கள். இப்போது வாய் திறக்க முடியாமலேயே செய்த்துவிட்டீர்கள்..

''நண்பர்களே நல்லா இருகிறீங்களா'' என்று பதிவு இடக்கூட இனிமேல் எல்லோரும் தயங்குவார்கள் போல. அந்த அளவுக்கு கருத்து கூறும் சுதந்திரம் தமிழ் நாட்டில் பறிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதோடு, பக்கச்சார்பாக விடயங்களை கையாளுவதையும் சுட்டிக்காடுவதாய் இப்பதிவு  அமைகிறது// 


சின்மயி & கார்த்திக்  (எனக்கும் சைபர் கிரைம் வந்தாலும் வருமையா)


1 comment:

Unknown said...

உங்கள் ஆதரவுக்கும்,அழைப்பிற்கும் நன்றிகள்//