எங்கயோ இருந்தெல்லாம் பீதிய கிளப்பி பயத்தில பேதிய போக பண்ணுறானுங்க.
குறிப்பு :- சத்தியமா இது சீரியஸ் பதிவு!
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தோடு நின்று விடாது அயல் நாடான இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வொன்றில் குறிப்பிடபட்டுள்ளது. அணு என்ற ஒற்றைச்சொல் இவ்வுலகை ஆட்டிப் படைப்பது நாம் அறிந்த ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தால் அங்கு உள்ள அணுஉலைகள் வெடித்து சிதறின. இதனால் எத்தனையோ உயிர்கள் அடையாளம் இல்லாமல் அழிந்ததோடு கடல் நீரிலும் அணுக்கழிவுகள் பரவின. இதனால் ஜப்பான் மட்டுமன்றி பல நாடுகளின் கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. மேலும் அணுவின் கோரத்தன்மைக்கு 2ம் உலகப்போரில் அமெரிக்காவால் கிரோஷிமா மற்றும் நாகசாயியில் வீசப்பட்ட அணுகுண்டுகள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை காணப்படுவதை உதாரணம் காட்ட முடியும்.
குறிப்பு :- சத்தியமா இது சீரியஸ் பதிவு!
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தோடு நின்று விடாது அயல் நாடான இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வொன்றில் குறிப்பிடபட்டுள்ளது. அணு என்ற ஒற்றைச்சொல் இவ்வுலகை ஆட்டிப் படைப்பது நாம் அறிந்த ஒன்று. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தால் அங்கு உள்ள அணுஉலைகள் வெடித்து சிதறின. இதனால் எத்தனையோ உயிர்கள் அடையாளம் இல்லாமல் அழிந்ததோடு கடல் நீரிலும் அணுக்கழிவுகள் பரவின. இதனால் ஜப்பான் மட்டுமன்றி பல நாடுகளின் கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. மேலும் அணுவின் கோரத்தன்மைக்கு 2ம் உலகப்போரில் அமெரிக்காவால் கிரோஷிமா மற்றும் நாகசாயியில் வீசப்பட்ட அணுகுண்டுகள் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை காணப்படுவதை உதாரணம் காட்ட முடியும்.

கடந்த பத்து வருடங்களுக்கு கூடுதலாக மேற்கொள்ளபட்டுவரும் கூடங்குளம் அணுமின்நிலைய வேலைகள் இவ்வாண்டளவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக கூடங்குளம் மக்கள் உண்ணாவிரதம், தண்ணீரில் இறங்கி போராடுதல் போன்ற முறைகளில் தங்கள் எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக அணு ஆலை தொடங்கப்படுவது ஒத்திப் போடப்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் எடுத்த நிலைப்பாட்டை மாற்றி, பொது மக்களின் அக்கறைகளைக் கவனத்தில் எடுக்கும் படி நடுவண் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் தமிழக முதலமைச்சரின் இந்த பட்டும் படாத கருத்தை இந்திய அரசு எப்படி ஏற்றுகொள்ளபோகிறது என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகவுள்ளது.
அணு ஆலைக்கு எதிராக ஆர்பாட்டக்காரர்களாலும் சமூக நலன் விரும்பிகளாலும் பல்வேறு காரணங்கள் பின்வருமாறு முன்வைக்கப்படுகின்றன
- மக்கள் நெருங்கி வாழும் இடத்தில் அணு ஆலை இயக்குவது அந்தச் சுற்றாடலில் வாழும் மக்களுக்கு நோய் வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
- அணு ஆலை விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள். முழுத் தமிழகமும் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.
- உயர் தொழில்நுட்பம் வாய்த்த சப்பான், யேர்மனி போன்ற நாடுகளே அணு ஆலைகளை கைவிடும் பொழுது, இந்தியா அதை முன்னெடுப்பது சரியான வழிமுறை அல்ல.
- கட்டுமானம் சீர்தரத்துக்கு ஏற்ற முறையில் இல்லை.
- சுற்றுச்சூழல் பாதிப்படையும்.
- கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம். தீவரவாதிகள் தாக்கலாம்.
உண்மையில் இவை அனைத்தும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயங்கள். ஆனாலும் அரசுத்தரப்பில் இருந்து பின்வருமாறு கருத்துக்கள் தெரிவிக்கபடுகிறது...
:> கூடங்குளம் அணு மின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லாத, இரண்டாம் நிலை மண்டலத்தில் தான் உள்ளது.
:> கூடங்குளம் அணு மின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, ஒரு வகையிலான குளிர்விப்பு முறையே போதும் என்ற போதிலும், நான்கு விதமான குளிர்விப்பு தொடர் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
:> கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
:> அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
............2030 இற்குள் ஜப்பானில் உள்ள அனைத்து அணுஉலைகளும் மூடப்படும் என்று அவ்வரசு அறிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் இந்த செயல்ப்பாடு மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எமது மரணத்திலும் பணம் தேடுவதற்கே அரசு தயாராகிறது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் வரப்பிரசாதங்களை எண்ணி எதிர்க்கட்சியில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியுமஇந்தப் பிரச்சினையில் வாயைத்திறப்பதில்லை.இந்தியா கோபித்துக்கொள்ளும் என்ற பயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதும் இல்லை.
வேறுவிதமாக வரும் தகவல்களைப் பார்த்தால் இலங்கையின் வடபுலத்தில் உள்ள மாதகல் எனும் இடத்தில இருந்து கூடங்குளத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இலங்கை தரப்பில் இருந்து உறுதியான பதில்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்றிருந்த போரில் தமிழர்கள் கொத்துகொத்தாக கொன்று குவிக்கபடுவதை வேடிக்கை பார்த்திருந்த இந்திய மத்திய அரசு இப்போது மீண்டுமொரு நாடகம் ஆடுவது அம்பலமாகிறது. டெல்லியும் கொழும்பும் எப்போதும் காப்பாற்ற படவேண்டும், தமிழனை அழித்தொழிக்க வேண்டும் என்று 'பரதேசி>பக்ஸவும் சொறிநாய்>சிங்கும்' கைகோர்த்து ஆடும் நாடகம் தான் இது..
இந்த நயவஞ்சகர்களை நம்பி மோசம் போகாமல் எமது உயிர்களைப் பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தென்னிந்திய மக்கள் போராடி வருகின்றனர். நாமும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்!
குறிப்பு:- (இவை எனது கருத்துக்களே உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் அதற்கு சங்கம் சப்போர்ட் பண்ணாது)
No comments:
Post a Comment