Saturday, November 16, 2013

சச்சின் கடவுளாகிறார் - வேண்டும் வரம் கொடுக்கிறார்

இன்றைய நாளை பொறுத்தவரை சச்சின் என்ற தனி மனிதன் அத்தனை சமூக வலைத் தளங்களையும் வளைத்து போட்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் சச்சின் நாமம் தான். இந்தியா கடந்து உலக நாடுகளெங்கும் வசிக்கும் சச்சினின் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வழியனுப்பும் இந்த வேளையில் அவருக்கு கிரிக்கட் வாழ்க்கையில் வயதோ (24) இருபத்தி நான்கு.! எப்போது இந்த மனுஷன் ஓய்வு பெறப்போகிறார். இந்தாள டீம்ல இருந்து தூக்குறாங்க இல்லையே என்று வசைபாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட இன்று சொட்டு கண்ணீர் வடித்து கடவாயில் சிரிப்பை வரவழைத்து கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவுவதை மறந்துவிட இயலாது. 

 எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று நானறிவேன் என்று அடிக்கடி அவரைப்பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் சச்சின் கூறி வந்தார். அதற்கு சரியான தருணமாக அவர் இந்த அழகிய தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது பலருக்கும் இப்போதுதான் தெரிகிறது. 
எவரும் நினைத்து பார்க்கமுடியாத 200 டெஸ்ட் போட்டிகள் என்ற இமாலய மைல் கல்லை எட்டிப்பிடித்த சச்சினை சக வீரர்களும் கண்ணீர் விட்டு வழியனுப்பினர். ''வாழ்ந்தால் சச்சினை போல் வாழவேண்டும், சச்சின் இல்லாத கிரிக்கட்டா, கிரிகட் கடவுள் எங்கள் சச்சின், கிரிக்கட்டின் அவதாரம் எங்க தெய்வம்'' என்று பதிவுகள் பேஸ்புக் ட்விட்டர் எங்கும் வியாபித்து கிடக்கின்றன. இதிலே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கபோவதாக இந்திய அரசு சற்று முன்னர் அறிவித்துள்ளது. இது கூட தேவையற்றது என்று முகநூலில் விவாதிக்கப்படுவது வேறு விறுவிறுப்பை கொடுத்துள்ளது. 



இந்த நேரத்தில் இந்தியாவின் பீகாரை சேர்ந்த நடிகர் ஒருவர் சச்சினுக்கு கோவில் கட்டியுள்ளதாகவும் நாளை மறுதினம் அந்த கோவிலை திறக்க போவதாகவும் கூறி எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறார்.வெறும் சொற்களால் சச்சினை கடவுள் என்றழைத்த அவரின் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சி இன்ப அதிர்ச்சி.!!


மனிதர் ஒருவருக்கு கோவில் கட்டுவது என்பது எவ்வாறான கோணத்தில் நோக்கப்பட போகின்றது என்பது தெரியவில்லை. ஆனாலும் சச்சினி தீவிர விசிறிகள் இதை புகழ்ந்து பாடப் போகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. வேடிக்கை என்னவென்றால் கிரிக்கட் மட்டை மற்றும் பந்துகளால் அந்த கோயிலின் கோபுரம் அமைக்கப்படுள்ளது என்பதாகும். இதை எவ்வாறான ஒரு செயலாக பார்ப்பது. இன்றைக்கு சச்சின் நாளைக்கு இன்னொருவர். இப்படியே கோயிலை கட்டி கும்பிட்டு கொண்டிருந்தால் எம் பகுத்தறிவை மூலையில் போட்டுவிட்டு அனைவரும் ஏதோ ஒருவரில் ஈர்ப்படைந்து அவரை பற்றியே எண்ணிக்கொண்டு புகழ்பாடி கடவுளை மறந்து மனிதரை மனிதன் வணங்கி வாழ வேண்டியதுதான். ரசிப்புத்தன்மை வெறித்தனமாக மாறுவது பொதுவாக அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு செயலாகும்.


மேலும் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஏனைய வீரர்கள் சச்சினை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். ஒழுக்க விதிகளை கடைப்பிடிப்பதில் சச்சினுக்கு நிகர் அவரே.

எது எப்படியோ சச்சின் புகழப்பட வேண்டியவரே தவிர போற்றி வணங்கவேண்டிய தெய்வமில்லை. தேசத்துக்கு பங்காற்றியவர் என்ற வகையில் சச்சினை வணகுவது தவறான செயல். கிரிக்கட்டில் அவர் சம்பாதித்துள்ளார். கிரிக்கட் அவரது தொழிலே தவிர சேவை கிடையாது. இந்த நேரத்தில் சச்சினை வாழ்த்தி வழியனுப்புவதே சிறந்த செயலாகும். 

இன்னும் சில நாட்களில் திருக் கோவிலில் குடியேறப்போகும் சச்சின் என்ற புதிய கடவுளுக்கு திருவிழா எடுக்கும் வரை காத்திருந்து களிப்படைவோம்.



கோயில கட்டிய எசமானே திருவிழாவுக்கு தவறாமல்  சொல்லி அனுப்புங்க ;)

1 comment:

Anonymous said...

omaaa