Friday, August 19, 2011

ஆசியாவிற்கு நடந்தது என்ன..??



வணக்கம் உறவுகளே! இது என்னுடைய ''குமரனின் எண்ணத்தில்'' வலைத்தளத்தின் முதலாவது பதிவாகும். நான் தாழ்ந்து போவதும் எழுந்து எழுதுவதும் உங்கள் மனங்களில் தான் தங்கியிருக்கிறது. என்னால் முடிந்தளவில் உங்களோடு ஒத்துபோகக்கூடிய உண்மையான கருத்துக்களை என் பதிவுகள் ஊடாக வழங்க எதிர்பார்கிறேன்/முயற்சி செய்கின்றேன்.
>>> தொடர்ந்தும் தொடருங்கள்///

உபதைப்பு:-கிரிக்கெட் வல்லரசுகளின் வீழ்ச்சிபாதை- எனது பார்வையில்!

தன்னை விட்டால் யாருக்கும் கிரிக்கெட்  விளையாட தெரியாது என்பது போல   உலகக்கோப்பையை வென்று தலைக்கனத்தில் ஆடிய இந்தியா எங்கே...?  ஐரோப்பா,ஆஸ்திரேலியா என்று அந்நிய நாடெல்லாம் சென்று வென்று வந்த இலங்கை எங்கே...?  உலகில் இளமையான அணி என்று வர்ணிக்கப்பட்ட, யாம்பவான்களுக்கு எல்லாம்  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பங்களாதேஷ் எங்கே..?  தலை சிறந்த வீரர்களை வைத்து தம்மை பற்றி புகழுரை வழங்கும் பாகிஸ்தான் எங்கே..? ஆசியாவிற்கு  நடந்தது  என்ன..?? வாங்க அலசலாம்.....
................................................
அனுபவ வீரர்கள் ஏராளம்...இளமைத்துடிப்பும் தாராளம்...இப்படியாக அனைத்து போட்டிகளிலும்  வெற்றி மேல் வெற்றிகளைக்குவித்தது  இந்திய அணி.!  இறுதியாக உலகக்கின்னத்தையும் வென்று,டெஸ்டிலும்  தான் தான் உலகில் நம்பர் 01 என்று பெருமையில் பீத்தியது.....இறுதியில் பெருமைக்கு  வந்தது வறுமை..ஆம் வெற்றிக்கு வறுமை ... இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் hatric தோல்வி...படு தோல்வி..! வெற்றி FM லோஷன் அண்ணா சொன்னது போல ''டெஸ்ட்  என்றவுடன் டோனி என்றால் தோல்வி என்றுதான் காதில் விழுகிறது'' இது 100% சரியாகத்தான் உள்ளது.!  நம்பர் 01 என்றவர்கள் இன்று எங்கே போய் விட்டார்கள்..  சுக்கிரதிசை நிலவிய டோனிக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்தில் வைத்து சனியன் பிடித்து விட்டது போல....நேரம் பார்த்து தன் திறமையால் இந்தியாவுக்கு  ஆப்பு வைத்தது இங்கிலாந்து..! முன்பு வேறு ஒரு தளத்தில்  நான் குறிப்பிட்டது போல  உலகக்கோப்பையுடன் தோனிக்கு குரங்கு பிஸ்னஸ் தான்.. சரியாகத்தான் இருக்கிறது...என்னதான் கோட்டையை  பிடித்தாலும்  அதனை தக்க வைப்பது தான் உண்மையான திறமை...அதனை போல தோனியின்  உலகக்கிண்ண வெற்றிக்கு கிடைத்த மரியாதையை  அவரே குழி தோண்டி புதைத்து கொண்டிருக்கிறார்........இவ்விடயத்தில் இலங்கை அணி பாராட்டப்பட வேண்டியது...ஏனெனில் புதிய அணித்தலைவர் சீரற்ற இடைவரிசை துடுப்பாட்டம் பலமற்ற பந்து வீச்சு என இங்கிலாந்து சென்று  மூன்று டெஸ்டில் ஒன்றை இழந்தனர் ஆனால் இரண்டை சமன் செய்தனர்....இவ்வாறாக ஆசியாவின் கோபுரத்துக்கு ஆப்பு ஆரம்பம் என்பது மட்டும் தெளிவு.......!
...........................................
இங்கே அங்கு (india) போன்று இல்லாவிட்டலும்....சங்காவின் தலைமை  பதவி  விலகலில் இருந்து இன்று வரை மந்தமான வெளிப்பாடுகளையே காணமுடிகிறது.......உலக கிண்ண இருதிப்போட்டிசில் விளையாடி தோற்றாலும் சங்ககாவின் வழிப்படுத்தலில் சிறப்பான திறனை இலங்கை அணி வெளிப்படுத்தியது.. மற்ற அணிகளை அச்சுறுத்தியது ...!ஆனாலும்  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்,ஒருநாள் தொடர் இழந்தமை...தற்போது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக t20 இரண்டில் வென்றாலும் ஒருநாள் போட்டிகளில் தடு மாற்றம் என உண்மையில்  இங்கும் அவதி தான்.... சிறந்த இளம் வீரர்கள் இருக்கும் படியாக களைத்துப்போன / தகுதியற்ற வீரர்களை அணிக்குள் சேர்ப்பது...இவ்வாறாக தேர்வுக்குழுவும் இந்நிலைமைக்கு காரணமாய் அமைகிறது......மேலும் வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,தாக்கு பிடிக்க முடியாமை போன்றவையும் இலங்கை அணியை சூழ்ந்து காணப்படும்  சோகங்கள் ஆகும்......அணித்தலைவர் டில்ஷான் தன பொறுப்பை சரிவர செய்தால் சிறப்பு....இல்லையெனில் இழப்பு.. ஆமாம் ( ஒருநாள் போட்டி தரவரிசையில் 2 ம் இடம்)....
...............................
இளமைதுடிப்பை மட்டும் நம்பிக்கையாய் கொண்டு எப்போதும் எதிரணியை அச்சுறுத்தி வந்தவர்கள்  இன்று தூங்குகிறார்களா? பெரிய மலைகளை வீழ்த்தியவர்கள் இன்று மதுவிடம் வீழ்ந்துவிட்டார்களா? இவ்வாறு என்னை கேட்க தூண்டுகிறது பங்களாதேஷ் அணியின் பரிதாப நிலை...ஆம் நியூசிலாந்தில் அசத்தினார்கள் ஆனால் தற்போது ஜிம்பாப்வே இடம் ஆடிப்போய்விட்டார்கள்....பங்களாதேஷ் ஐ விட ஜிம்பாவே கீழ்த்தர அணியாகும் அதாவது டெஸ்ட் அந்தஸ்தை கடந்த ஆறு வருடங்களாக இழந்திருந்த அணியாகும்...அந்த அணியுடன் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி..  அதுமட்டும் இல்லாது  தல டோனி 3 டெஸ்டிலும் ஹாட்ரிக் தோல்வி கண்டது போல இவர்களும் 3 ஒருநாள் போட்டிகளிலும் தொடர் தோல்வி...ஆஸ்திரேலியா வோட தோற்றால் ஒரு கைதட்டு கொடுக்கலாம்..இவங்க தோற்றது யாரோட... இவர்களின் பலவீனத்தை சிம்பாவே அணி பலமாக பயன்படுத்தி ஹீரோ ஆகிவிட்டது....என்ன பண்ண  சிம்பாவேக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியது தான்......!
........................................
பாகிஸ்தானை நான் இறுதியாக விமர்சிக்க காரணங்கள் உண்டு....என்னவென்று கேட்கிறீங்கள? ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள் உள்ள உட்பூசல்கள்....மற்றது இப்போ பாகிஸ்தானுக்கு போட்டிகள் இல்லாமை....இப்படியாக ஒருகாலத்தில் இம்சமாம் உலகக் , முஹமத் யூசுப்,
வாசிம் அகரம் என கொடிகட்டிப்பறந்த வீரர்களை கொண்டு வெற்றிக்கொடி நாட்டிய பாகிஸ்தான் அணி இன்று சிக்கி சின்னாபின்னமாய் போய் உள்ளது... கிரிக்கெட் விளயாடப்பிடிக்காமல் சூதாட போய்விட்டனர் சிலர்...ஆமா  சிலர்..
இருப்பவர்களும் ஏனோ தானோ என்று ...சீரற்ற தலைமைத்துவம்...எனினும் உலகக்கிண்ண போட்டிகளில் சிறப்பாகவே செயல் பட்டனர் இவர்கள்...இந்தியாவுடன் தோற்றாலும் அரை இறுதி வரை வந்த பெருமைக்குரியவர்கள்....ஆனாலும் ஜப்பானில் அடிக்கடி சுனாமி வருவது போல பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் அடிக்கடி சோதனை வருகிறது....இதுதான் இவர்களை மற்றவர்கள் திருப்ப்பர்காமல் இருப்பதற்கு காரணம்.....
.........................................
இதுவரை அலசியவற்றை ஒப்பிட்டு  ஒட்டுமொத்தமாக எடுத்து பார்க்கையில் ''ஆசியாவில் அதிரடி'' என்று சொன்ன காலம் போய் ''ஆசியாவுக்கே சரவெடி'' என்று சொல்லும் காலம் தோன்றிவிட்டது... 
      ........ ஆசியாவுக்கு நடந்தது இதுதான்....... 
இதுபற்றிய   உங்கள் விமர்சனங்களை எதிர் பார்கிறேன்..

முதல் முயற்சியோடு குமரன்/
  

No comments: