Tuesday, August 23, 2011

தமிழ் சினிமாவுக்கே ஆப்பு வைக்கும் குறும்படங்கள் : அலசல்


தமிழ் நாட்டை உலகுக்கு அடையாளம் காட்டுவது  தமிழ் சினிமா...இந்த தமிழ் சினிமாவுக்கே சவால் விடும்வகையில் / மாற்றியமைக்கும் வகையில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்படுபவை தான் இந்த குறும்படங்கள்..ஒரு திரைப்படத்தை பார்த்து முடிக்கும் நேரத்தில் பதினைந்து குருந்திரைப்படன்களை பார்க்ககூடியதாக இருப்பது  இவற்றின் சிறப்பு. சுருக்கமான ஒரு கதை  அல்லது ஒரு காட்சியை மட்டும் மையமாக  வைத்து எடுக்கப்படும் இத்தமிழ் குறுந்திரைப்படங்கள் பார்வயாளர்களிடத்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது உண்மையிலேயே சிறப்பு. ஏனெனில் சமூகத்தில் சாதாரண வாழ்க்கை வாழும் இளைஞர்கள் அதிகமாக இவற்றில் ஆர்வம் காட்டி சிறந்த படங்களை உருவாக்குகின்றனர். இது அவர்களின் எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைத்து கொடுக்கின்றது என்றால் மிகையல்ல. இந்த பாணியில் கலைஞர் தொலைக்காட்சி வழங்கும் நாளைய இயக்குனர் என்ற குந்திரைப்பட நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.. காதல்,கவலை,நகைச்சுவை,தத்துவம்,பொழுதுபோக்கு என்று பலவகையில் இவை உருவாக்கப்படுகின்றன...முகப்புத்த்கம்,வயசு,முதல் காதல் மழை  போற உச்ச தரத்திலான குறுந்திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது நாம் அறிந்த விடயங்களாகும்...இவாறு தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்படும் நவீன குறுந்திரைப்படங்களில் நான் ரசித்த முகப்புத்தகம் என்ற  ஆக்கம் என் தளத்தில்   உங்களுக்காக...
                                                                                         

No comments: