Sunday, October 28, 2012

யாழ் ஏன் வீழ்கின்றது..?

உலகெங்கும் தமிழையும் பண்பாட்டையும் வளர்த்த பெரியோர்கள் வாழ்ந்த மண்தான் இந்த யாழ் மண். தன்மானத்தையும் வீரத்தையும் தம்மிரு கண்களாக கொண்டு வாழ்ந்தனர் யாழ் மக்கள்...உலகம் முழுவது ஓங்கியது யாழ் மண்ணின் புகழ்,கலாசாரம்,பண்பாடு..! இலங்கையரின் தனித்துவத்தையும் சிறப்பையும் உலகுக்கு எடுத்தியம்பிய  அதே யாழ் மண் இன்று மற்றவனிடம் மண்டியிடும் நிலைமைக்கு தள்ளப்படுவது எதனால்??...........
                                          
உணவுக்கு பஞ்சம் வந்த காலத்தில் கால் வயிறு சோறு உண்டனர் யாழ் மக்கள். இன்றைய  பெண்களுக்கு உடைக்கு பஞ்சம் வந்துவிட்டது போலும், அதனால்த்தான்  அரைமுழ  ஆடையில் யாழ் நகரை சுற்றி வலம் வருகின்றனரோ என்னமோ.!! (சில குடும்ப குத்துவிளக்குகள் )  
குடி போதையில் கும்மாளமிடும் இளைஞர் கூட்டத்தால் கலாச்சாரத்துக்கு அடையாளமாய் விளங்கும் சில பெண்களும் வீதிகளால் செல்ல முடியாத நிலை. மானத்தையும் ,கற்பையும் கடவுளாய் எண்ணி வாழ்ந்தனர் அன்றைய யாழ் மண்ணின் பெண்மணிகள் ..இன்று அவற்றை விற்று வாழ்க்கை நடத்துகின்ற துர்பாக்கிய  நிலைக்கு ஆளாகிவிட்டது ஒழுக்கம் கெட்ட சில  பெண்கள் சமூகம். நாகரீக வளர்ச்சி என்ற போர்வையில் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் குழிதோண்டி புதைதுக்கொண்டிருக்கின்றனர். 

அன்று ஆறுமுக நாவலர் தோன்றினார் சிறையில் அகப்பட்ட தமிழையும் சைவத்தையும் மீட்டெடுத்தார்.இன்றும் நாகரீக நாவலர்கள் உள்ளனர் அவர்கள் தான் நாகரீகம் என்ற போர்வையில் தங்கள் வாயிலே தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டிருக்கும்  கோமாளிகள்/// யாழ்ப்பாணத்தில் யாழ் ஓசை ஒலித்த காலம் போய் இன்று நாகரீகத்தின் பிடியில் சிக்கி  இரைந்து கொண்டிருக்கின்றது இன்றைய இளம் சமுதாயம். இவற்றுக்கெல்லாம் நம் செயற்பாடுகளே காரணம். கடற்கரை சாலைகள், கலாசாரத்தின் பிரதிபலிப்புக்களான ஆலயங்கள் என யாழ் மண்ணின் புனித/பொது  இடங்களை சீரளித்துக்கொண்டிருக்கின்றது இன்றைய ஒழுக்கம் கெட்ட சமூகம். ஆங்கிலேயரை விரட்டியடித்தனர் ஆனால் அவர்களின் கலாச்சாரத்தை பிடுங்கி எடுத்துவிட்டுத்தான்...(தமிழனின் குணம் ஒன்று இதில் வெளிப்படுவதனை அவதானிக்கலாம்) வெளி இடங்களில் யாழ்ப்பான வாசி என்றால் தலை குனிய வேண்டிய நிலை விரைவில் வரப்போகின்றது என்பது மட்டும் தெளிவு. அந்த அளவில் போகின்றது இன்றைய யாழ் மண்ணின் பரிதாப நிலை....இதை தடுக்க  கழகங்கள்,மையங்கள்,தளங்கள்,சபைகள் என  எத்தனையோ  உருவாகியும் பலன் வெறும் ஏமாற்றம்  தான். ஒரு காலத்தில் ஒழுக்க சீலர்களாக மாணவர்களை வளர்த்து குருகுலம் என்னும் கோயிலில் கல்விக்கடலை ஊட்டி இன்றைய உலகின் தலைவர்களாக்கிய பெருமை யாழ்ப்பாணத்தின் அன்றைய ஆசிரியர்களையே சாரும். இலங்கையில் கல்வி வளர்ச்சியிலும் சரி கலை கலாசார நிகழ்வுகளிலும் சரி பெரும்பான்மையினருக்கே சவால் விடும் அளவுக்கு முன்னேறிய தமிழ் கல்விமான்களை உருவாக்கிய பெருமைக்குரிய புண்ணிய பூமி இது.


நாகரீகத்தின்பால் ஈர்க்கப்படுவது மனிதனின் இயல்புதானே என்று இதை வாசிக்கும் உங்கள் மனதில் சில எண்ணங்கள் தோன்றலாம்..நானும் இல்லை என்று சொல்லவில்லை. மாறாக குறிப்பிட வருவது யாதெனில்: என்னதான் அந்நிய கலாச்சாரத்தின் ஊடுருவல் எம் நாட்டுக்குள் இருந்தாலும், எம்மவர் அதனைக்கடைப்பிடித்தாலும் எமக்கே உரிய சில பாரம்பரியங்கள் பண்பாடுகளை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்கவோ இழக்கவோ கூடாது. நான் தமிழன் என்றொரு உணர்வு எம்மனதினுள் விதைக்கப்பட வேண்டும்.

காலவோட்டத்தில் மனிதன் மாறவேண்டும் என்பது நியதி அதைத்தான் செய்கின்றனர் எம்மவர்கள் எவ்வாலு செய்கின்றனர் என்பதில் தான் சிக்கல்..மனிதன் புதிய சிந்தனைகளையும் நாகரீகத்தின் நல்ல பண்புகளையும் பெற்றவனாக மாற வேண்டுமே தவிர மிருகத்தனம் கொண்ட கேளிக்கை கோமாளியாக அல்ல/// எவனையோ பார்த்து நாம் மாறுவதை விரும்புகின்றோம். ஆனால் எம் தாய் மொழிக்காய் ஒரு வேளையாவது  சிந்த்திதிருப்போமா.

இவ்வாறு காணப்படுகின்றது தமிழுக்கு அடையாளமாய் விளங்கும் யாழ்ப்பாணம்.  இந்த நிலையில் இருக்கும் எம் தாய் மண்ணை மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு எடுத்துச்செல்வது இளைஞர் சமுதாயமாகிய எம் கடமை என்பதை யாழ் இளைஞர்கள் எல்லோரும் புரிந்து செயற்பட்டால் யாழ் ஓசை  மீண்டும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.


சில கீழ்த்தரமான செயல்களையும், எம்மர்வக்கு இல்லாத அசிங்கமான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற கணத்திலே எழுந்த ஆதங்கமே இப்பதிவுக்கு அத்திவாரம் 


''தமிழ் வளர்த்த பூமியில் அணுகுண்டை போட்டோம் இனிமேலாவது கருகிய பயிர்கள் தளிர்க்க தண்ணீர் ஊற்றுவோம்''



                                       

4 comments:

Unknown said...

வாழ்த்துக்கள், அருமையான பதிவு. தொடர்ந்தும் எழுது :)

Unknown said...

நன்றி நண்பரே :)

kumar said...

நல்ல ஆக்கம் குமரன்; !! முன்பு` ஏதோ ` ஒரு கட்டுப்பாடு இருந்தது -- தட்டி கேக்க ஆள் இருந்தது ; இன்று அது இல்லை,,, அது தான் நீங்கள் மேலே சொன்ன சீரழிவுகளுக்கு காரணம் என்பது எனது கருத்து ,,,,,,,,,,,

Unknown said...

hmm...உண்மை. நன்றி நண்பரே// தொடர்ந்தும் தொடருங்கள்.