Saturday, March 10, 2012

ஆசிய கிண்ணத்தின் ஆரம்பமும் எதிர்பார்ப்பும்...

ஆசிய கிண்ண போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன....! பத்து முறை நண்டை பெற்றுள்ள இப்போடிகளில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத பங்களாதேஷ் போட்டிகளை நாடாதுவது பெரும் வரவேற்புக்குரிய விடயம்....மேலும் அவ்வணி மீதும் சில கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்கள் ஆதரவையும் எதிர்வு கூறல்களையும் வெளிப்படுத்தி உள்ளமை குறிப்பிடவேண்டிய விடயம்....மேலும் அந்நிய மண்ணில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி மீதான பார்வை கடந்த வருடங்களை விட குறைவாகவே காணபடுகிறது. எனினும் இந்திய ஆசிய மைதானங்களில் அரசன் என்பதை யாரும்  நிராகரிக்க முடியாது. தற்காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சி இந்தியாவையும்  இலங்கையையும் சற்று பீதி அடைய வைத்திருப்பது  இருப்பது உண்மை..மேலும் இந்திய பாகிஸ்தான் மோதுகின்ற போட்டியையும் பெருமளவு எதிர்பார்த்து இருக்கின்றனர் ரசிகர்கள்.


இலங்கை அணி சொந்த மண்ணிலும் சரி அந்நிய மண்ணிலும் சரி எந்த வேளையிலும் எதிர் அணிக்கு சிம்ம சொற்பனமாக இருக்கும்..அது ஆசிய கிண்ணத்திலும் தொடர்நதால் அவ்வணியின் ஆதிக்கம் நிலைக்கும். எது எவ்வாறாயினும் கிரிக்கெட்டில் எதையும் முன்கூட்டி சொல்ல முடியாது என்பது உண்மை..உதாரணமாக பங்களாதேஷ் அணி ஆசிய கிண்ணத்தை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் ஏற்றுகொள்ள தான் வேண்டும்...

No comments: