Wednesday, February 6, 2013

ப்ளாக்கர்கள் ப்ளாக் செய்யப்படுகின்றனரா!


வணக்கம் உறவுகளே, சில நாட்களாக வலையுலகின் பக்கமே வரவில்லை. சிலர் எழுதுவதை கைவிட்டிருக்கிறார்கள் போலும். பலரின் பக்கங்கள் வெறிச்சோடிப்போய் உள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் ப்ளாக்கை தூசி தட்டலாம் என்றொரு எண்ணம் தோன்றியது. வந்துள்ளேன் ...வாருங்கள்.

சமூக வலைத்தளங்கள்  ஆரம்பிக்கப்பட்ட காலம் படைப்பாளிகளின்  பொற்காலம். பலரின் எழுத்துப்பசியை தீர்த்து வைத்த பெருமை இந்த சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. அதிலும் ஆரம்ப காலகட்டத்தில் பேஸ்புக், ட்விட்டர் வளர்ச்சி அடையாத காலத்தில் கூட எமது எழுத்தாளர்களுக்கு முதுகெலும்பாய் விளங்கியது இந்த வலையுலகம் என்றால் மிகையல்ல. பலர் விளையாட்டாக இந்த வலை தளத்துக்குள் நுழைந்து தற்போது போற்றப்படும் எழுத்தாளர்களாக விளங்குகின்றனர் என்றால் அவர்களை எழுத வைத்த பெருமை இந்த வலைத்தளதுக்கும் வாசகர்களுக்குமே சாரும். 
பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் எதிர்பாத்து எதிர்பார்த்து பசி இன்றிப்போன நம் கலைஞர்களுக்கு உறுதுணையாய் வந்ததுதான் இந்த கூகுள் வலைத்தளம்.





'' எழுதுங்கள் உங்கள் மனதில் தோன்றும் நல்ல விடயங்களை எல்லாம் எழுதுங்கள்'' என்று பெரியவர்கள் சொல்லும்போது ஒரு ஆவலில் எழுதியவர்கள் தான் இன்று உலகில் முதன் நிலை எழுத்தாளர்களாக விளங்குகின்றனர். நான் அறிந்தவரை பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரபலமானவர்களை விட இந்த வலையுலகம் அளித்த பேற்றில் மிகுந்தவர்கள் தான் அதிகம். நாகரிக எழுத்தாளர்களின் களம் இந்த வலைத்தளம்.


எல்லாமே சரி தான். ஆனாலும் தற்காலத்தில் பேஸ்புக்கின் வளர்ச்சியின் தாக்கத்தினாலோ என்னமோ பல பதிவர்களை வலையுலகில் காண கிடைப்பதில்லை. நான் மிகச்சிறியவன் இந்த உலகத்துக்கு. ஆனாலும் பல மூத்த அண்ணாக்கள் எழுதுவதை குறைத்து கொண்டிருக்கினறனர் என்பது உண்மையான விடயம்.




பலர் பேஸ்புக்கிலேயே கருத்தை சொல்லிவிட்டு விலகி விடுகின்றனர். பேஸ்புக் 'ப்ளாக்கர்களை' ப்ளாக் (Block) செய்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. இதற்கு நண்பர்கள் தளத்தின் பதிவர் அண்ணன் ராஜ் பேஸ்புக்கில் இட்ட இடுக்கையை அடையாளம் காட்டலாம்.

**********
(ஒரு காலத்தில் பதிவுலகில் எவ்வளவு பிசியாக இயங்கினோம்.பதிவு போட்டுவிட்டு மைந்துவின் தளத்தில் ஹன்சி பற்றி ஒரு பதிவை படித்துவிட்டு அப்படியே நிரூபன் அவர்களின் நாற்றில் ஒரு காரசாரமான விவாதம் செய்துவிட்டு,விக்கி மாம்ஸ் தளத்தில் ஏதாவது எடக்கு மொடக்கான கமண்ட் போட்டுவிட்டு,சி.பி அண்ணனின் திரை விமர்சனம் படித்துவிட்டு துஷியின் தளத்தில் ஏதாவது கலாய்த்து கமண்ட் போட்டுவிட்டு,தனிமரம் ப்ளாக்கில் ஒரு கமண்ட் போட்டுவிட்டு,பாலகணேஸ் பாஸ் பதிவில் ராஜேஸ்குமார் பற்றிய பதிவு படித்துவிட்டு சுரேஸ் அண்ணன் வீடு தளத்தில் சகிலா பட விமர்சனம் படித்துவிட்டு அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே மன்னிச்சூ.....தமிழ்வாசி,வேடந்தாங்கல்,கவிதைவீதி,கானாமல் போன கனவுகள்,தமிழ் ஆதி என்று பல தளங்களில் கும்மி அடித்துவிட்டு பின் செங்கோவி அண்ணன் தளத்தில் நள்ளிரவு கடந்தும் கும்மி தொடரும்.....அது ஒரு காலம் இப்ப எல்லாம் பதிவுலக பக்கம் போகவே மனம் வரவில்லை.மேலே நான் குறிப்பிட்ட பல பதிவர்களும் எழுதுவதை குறைத்துக்கொண்டார்கள் இல்லை ஒதுங்கிவிட்டார்கள்......(சி.பி அண்ணன் விதிவிலக்கு அவருக்கு பதிவுகோமியா போல சாப்பிடாமல் கூட இருப்பார் போல அண்ணன் பதிவு போடாமல் இருக்கமாட்டார் போல அவ்வ்வ்வ்வ் அண்ணே மன்னிச்சூ) மீண்டும் இப்போது மெல்ல மெல்ல பழய பதிவர்கள் பலர் எழுதத்தொடங்கிவிட்டார்கள் என்பது சந்தோசமான விடயம் நாஞ்சில் மனோ அண்ணன் மீண்டும் ப்ளாக்கை தூசி தட்டியுள்ளார்,விக்கி மாம்ஸ் தூசி தட்டுவதாக அறிவித்தார்,தமிழ்வாசி அண்ணன் அவர்கள் இரண்டாவது இனிஸ்சை ஆரம்பித்துவிட்டார்....இதனால் நானும் மீண்டும் பதிவுலகில் சீராக இயங்கலாமா என்று யோசித்து வருகின்றேன் பார்போம் சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் அந்த பழய கும்மிகளை தொடர்வோம்#அது ஒரு காலம்) 
இவ்வாறு முடிக்கிறார் அந்த பதிவர். மேலும் மதிசுதா அண்ணன், விக்கி மாமா போன்ற உறவினர்கள் இவ்வுலகப்பக்கம் திரும்பி வந்தால் நல்லம். மண்ணின் மைந்தன் (சிவா) திடீரென்று கிளுகிளுப்பு பதிவுகளை இட்டு குஜால் பண்ணுகிறார். வாழ்த்துக்கள். என்னம்மோ இன்னும் 5 ஆண்டுகளுக்காவது பதிவுலகத்தை கட்டி காக்கும் பொறுப்பு தமிழ் பதிவர்கள் எல்லோரிடமுமே உள்ளது என்பது நிதர்சனம். 

எழுத்துக்கள் வாழட்டும்.
<<நன்றிகள்>>

2 comments:

Unknown said...

கனாக்காலம் :)

Unknown said...

ஒஹ் அதுவா.!! ஹ்ம்ம் thx Bass :)