பொதுவாக நான் திரைப்படங்களை எதிர்பார்ப்புக்களோடு பார்ப்பதில்லை. ஏதோ சும்மா ஒரு பொழுது போக்குக்காகத்தான் பார்ப்பேன். திரையரங்குகளுக்கும் செல்வது மிகக்குறைவு. தொலைபேசிக்கு மீள்நிரப்ப போகும் போது கடைக்காரரிடம் சில ஒரிஜினல் DVDகளை வாங்கி வருவது வழமை. அவ்வாறுதான் சென்னையில் ஒருநாள் படம் பார்த்த கதையும் கூட. படத்தை வாங்கி வந்து கிட்டத்தட்ட பத்து நாட்களாகிவிட்டது. நேற்று இரவு IPL போட்டி தூக்கம் வர வைத்ததால் 'சென்னையில் ஒரு நாள்' என் கண்ணில் பட்டது.
சேரனே படத்தின் முக்கிய திருப்புமுனையாக திகழ்கிறார். நடிப்பில் என்பதை விட வாகனம் செலுத்துவதில் சாரதியாய் சாதித்து தன் களங்கத்தை துடைத்து சாந்தம் காட்டுகிறார்.
சற்று தூக்கலாகவே முதல் முப்பது நிமிடங்கள் ஓடினாலும் அடுத்துவரும் முக்கால்வாசியும் நம்மை திக்குமுக்காட வைப்பது எதிர்பார்க்காத விறுவிறுப்பு.
இங்கே நான் கதையை கூற விரும்பவில்லை. இது விமர்சனம் கூட இல்லை. போ(B)ர் அடிக்கிறதே என்று இரவு பதினோரு மணிக்கு பின்னர் போட்ட படம் தூங்க சென்றும் தூக்கத்தை தடுத்து என்னை அதை பற்றியே சிந்திக்க வைத்ததால் இங்கே பகிர்கின்றேன். பார்க்காதவர்கள் ஒரு முறை பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்!! நல்ல படங்களை மிஸ் பண்ணிடாதீங்க :-)
No comments:
Post a Comment