Wednesday, August 31, 2011

இடிவாங்கும் இந்தியாவும் சாதிக்க துடிக்கும் இங்கிலாந்தும்..!

 இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்று கேட்டால் இப்போதைக்கு அனைவரும் சொல்வது இந்தியா அடி வாங்குகிறது என்று தான்..! அந்த அளவுக்கு இங்கிலாந்து ஆக்ரோசமாக விளையாடி வருகிறது..டெஸ்டில் தான் படுதோல்வி. சரி ஏனைய t20 & one day போட்டிகளிலாவது இந்தியா பழி வாங்கும் என்று பார்த்தால். பாவமாய் போயிருக்கிறது..இதனை காட்டுவது நேற்றைய t20 போட்டி.! 6 விக்கெட்டுக்களால் அடிவாங்கியிருக்கிறது இங்கிலாந்திடம் இந்தியா.! எப்படா சாமி இங்க இருந்து வீட்டுக்கு போவோம் என்று தோனியும் இந்திய அணியினரும் சலித்துபோயிருக்கின்றனர்  போலும்... கம்பீர் காயத்தால் தப்பி பிழைத்துவிட்டார்...எனக்கும் எப்ப காயம் வரும் என்று தோனியும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். 
                                                                        
                                                         ............................................
அயர்லாந்து,நெதர்லாந்து கூட இந்தியாவையும் icc சேர்க்க போது போலதான் இருக்கு. மற்ற அணைகளால் சபிக்கப்பட்ட அணிகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு  அடுத்த படியாக இந்தியாவும் வந்து சேர்ந்திருக்கிறது..! ஐரோப்பா கண்டம் என்றால் தோனிக்கு கண்டம்தான். சொந்த மண்ணில் வைத்து துவைத்து எடுத்த அணிகளிடம் அந்நிய மண்ணில் வைத்து  வரிசையாக அடி வாங்க போகிறது தோனியின் கூட்டம்..! உலககிண்ணதில் கிடைத்த  பிளஸ் எல்லாம் மைனஸ் ஆகப்போவது உறுதி... ''என்னமோ ஏதோ எவனும் ஒரு இடத்தில தொடர்ந்து இருக்க முடியாது'' என்ற என்னுடைய கருத்து  இப்போது மெதுவாக பலித்து வருகிறது..! ஒருநாள் மட்டும் பொறுத்து  இருந்து பார்ப்பம். ஒருநாள் இல்ல ஒருநாள் போட்டிகள் முடியும் மட்டும் இந்தியாவை கொஞ்சம் free ஆக விடுவம்...பிறகு தொடரும்..      
                                                                   நன்றியுடன்  உங்கள் நண்பன் குமரன்..!

No comments: