Saturday, January 7, 2012

கொலைவெறியின் சாதனையும் வேதனையும்.

அண்மையில் நடிகர்,எழுத்தாளர்& பாடகர் தனுஷ் பாடி வெளியாகி சக்கை போடு போட்ட வை திஸ் கொலைவெறி என்ற தமிழ் கலந்த ஆங்கில பாடலின் பின்னணி பிரச்சனைகள் தற்போது கிளம்ப ஆரம்பித்துள்ளன..
நான் ரசித்த வரையில் அந்த பாடலை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை..குழந்தை முதல் குடு குடு தாத்தா வரை வாயசைக்கும் பாடலாக மாறிவிட்டது கொலைவெறி. ஆனாலும் உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்கள் மெல்ல மெல்ல தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்..இதன் காரணமாக் அற்புத நடிகரான தனுஷும் சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளார்..
வித்தியாசமான் பாணியில் தனது விந்தையான கற்பனை திறனை வெளிப்படுத்தி தனுஷ் பாடலை எழுதி இருந்தார்...இதுவே பாடலின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்தது எனலாம்..ஆனாலும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கு மயங்கியே இங்கிலீசு ஒன்றும் புரியாத புதிர்கள் கூட வை திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி என்று பாடிக்கொண்டு திரிவது மறைக்கபட்ட உண்மை...இதை ஐஸ்வர்யா தனுஷும் கூட மீடியாக்களில் புலப்படுத்தி  இருந்தார்..என்னமோ தனுஷ் தான் இந்த பாடலின் மொத்த வெற்றிக்கும் உரிமையானவர் என்பது அவரின் கருத்து..இதுவும் தனுஷின் இமேஜ் குறைந்து போக பின்னணி காரணி..இதுவும் மறைக்க முடியாத உண்மை.:)
இவ்வாறு ஆரம்பத்தில் எந்தவித விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் உலகமெல்லாம் பறந்து திரிந்த கொலைவெறி பிடித்த பாடல் இப்போது ஏன் இந்த கொலைவெறி என்று தனுசைபார்த்து கேட்கும் அளவுக்கு விமர்சிக்க படுவது வேதனைக்குரியதாக மாறிவிட்டது..
இதற்கு சிறந்த உதாரணம் யாழ்ப்பாணத்து இளம் தமிழ் ஆர்வலரான ஸ்டாலின் என்பவர் பாடியுள்ள தமிழ் கொலைவெறி பாடல்...
ஒரு சில வரிகள் உங்களுக்காக...:-
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறி டா.
என் தமிழ் மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா.
கல்தோன்றி மண் தோன்ற முன் வந்த தமிழ் மொழிடா... ...இவ்வாறு செல்கிறது அந்த அற்புதமான இளம் கலைஞரின் வரிகள்..*

1 comment:

ruban said...

முதலில் கூத்தாடிகளுக்கு செம்பு அடிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு, சமுதாயத்து பயன் உள்ள பதிவுகளை பகிருங்கள்... சமுதாயத்துக்கு கருத்து சொல்ல வந்த சினிமா நரி போய் கிடக்கிறது அதை எதவும் சொல்ல வில்லை.... முதலில் கூத்தாடிகளுக்கு செம்பு தூக்குவதை நிர்துங்கள்