Tuesday, August 23, 2011

யாழ்ப்பாணமும் மிஞ்சவில்லை..!

நாட்டின் மதிய பகுதிகளை  அச்சுறுத்தி வந்த கிரீஸ் பூதங்கள் எனப்படும் மர்ம மனிதர்கள் யாழ்ப்பானத்தையும் விட்டுவைக்கவில்லை..! நேற்று முன்தினம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் இதனை உணர்த்துகிறது.  வீடுகளுக்குள் நுழைய முயன்ற கிரீஸ் பூதங்கள் மக்கள் சுதாகரித்துக்கொண்டவுடன் ஓடித்தப்பியுள்ளன.இதன் காரணமாக யாழ் மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.,....மேலும் நல்லூர் ஆலய இரவு திருவிழாக்களுக்கும் மக்களின் வருகை குறைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இதன் [பின்புலம் பற்றி முரணான பல கருத்துக்கள் விவாதிக்கப் படுகின்றன. எனினும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவும்.தமிழ் மக்களை போருக்கு பின்னரும் நிம்மதியாக வாழவிடாமல் செய்வதற்கும்  முயற்சி மேட்கொள்ளப்படுகின்றது என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. 
                                                                                      
போரின்போது யாழில் காணப்பட்ட நிலைமை மீண்டும் தலை தூக்கும் அபாயம் நிறையவே காணப்படுகிறது. பெண்களை மட்டும் இவர்கள்( கிரீஸ் மனிதர்) இலக்கு வைப்பது,கொலை மற்றும் காயப்படுத்தல் போன்றவற்றை மட்டும் செய்வது.போன்ற செயற்பாடுகள் எம்மை ஐயப்பட வைக்கிறது..மேலும் அச்சத்தில் ஆழ்த்துகிறது.! நாட்டில் பெரும் புரட்சியே ஏற்பட்டுவிடும் போல தோன்றுகிறது. இதுபற்றி யாரும் உண்மைக்கருதுக்களை வெளியிடாமல் மூடி மறைப்பது வருத்தமளிக்கிறது. தம்மை தாம் தான் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு இலங்கைத்தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த கிரீஸ் பூதங்கள் யாரால் உருவாக்கப்பட்டவை ஏன் இவை இப்படி மக்களை தாக்குகின்றன என்பது பற்றி அறிந்தவர்களிடம் கேட்டாலும்  துணிவாக உண்மைத்தகவல்களை வெளியிட பலரும் மறுக்கின்றனர்.இதற்க்கு நாட்டு நிலைமை தான் காரணம் என்றும் கூறுகின்றனர்.. இவ்வாறு கிரீஸ் பூதம் என்ற போர்வையில் மக்களை  நயவஞ்சக கூட்டம் சில வேளைகளில் மக்கள் கையில் அகப்பட்டு நயப்புடைக்கப்பட்டதும் நாம் அறிந்த விடயமாகும்....
                                                                                                   எது எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடைமையாகும். ஆயினும்  தப்பி  இருந்த  யாழ்ப்பாணமும் இன்று இந்த கவலைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டது  மக்களிடத்தே சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.......
                                                

No comments: